"உலகமே இந்தியா பற்றி பேசுகிறது" - வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
வெளியுறவு அமைச்சர் என்ற முறையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லும் தாம், இன்று உலகம் முழுவதும் இந்தியாவைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை பார்ப்பதாக ஜெய்சங்கர் கூறினார்.
திருவனந்தபுரத்தில் மத்திய அரசின் விக்ஷித் சங்கல்ப் பாரத் யாத்ரா நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவால் எப்படி மாற்றங்களை செய்ய முடிகிறது என்று உலக நாடுகள் கேட்பதாக தெரிவித்தார்.
தொலைநோக்குப் பார்வையுடன் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதும் இதற்கு காரணம் என்று தாம் அவர்களுக்கு பதிலளித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆதாருடன் வங்கிக் கணக்குகள், தொலைபேசி போன்றவற்றை இணைத்து பயனாளர்கள் நலத் திட்டங்களை நேரடியாக பெறுவதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்த ஜெய்சங்கர்
10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மக்களின் வாழ்க்கையை மாற்ற மகத்தான பணிகளை செய்துள்ளதாக கூறினார்.
Comments